தனது ஆசிரமத்துக்கு சொந்தமான சொத்துகள் அனைத்தும் யாருக்கு சேர வேண்டும் என உயில் எழுதி வைத்திருப்பதாக நித்யானந்தா தெரிவித்துள்ளார். யூ-டியூப்பில் உரையாற்றிய அவர் இதனை தெரிவித்தார்.
என்னதான் சர்ச்சைகள் சலங்கை கட்டி ஆடினாலும் நித்யானந்தாவின் சத்சங்கங்கள் நின்றபாடில்லை. சிறுமிகளை வைத்து ஆசிரமத்திற்கு கோடிக்கணக்கில் நிதியும் ஏக்கர் கணக்கில் நிலமும் வாங்கினார் என நித்யானந்தா மீது அவரது முன்னாள் பக்தை அண்மையில் குற்றம்சாட்டியிருந்தார். ஆசிரமத்துக்கு பணமும் சொத்துகளும் வந்த வழி சரியானதுதானா என்ற வினாவுக்கு விடை தெரியாத நிலையில் அவை யாருக்கு சேரும் என உயில் எழுதி வைத்துவிட்டாராம் நித்யானந்தா.
பின்னாளில் தனது ஆசிரம சொத்துகள் யாருக்கு சேர வேண்டும் என இப்போதே உயில் எழுதி வைத்துவிட்ட நித்யானந்தா, இன்னும் என்னென்ன FUTURE PLAN-களை வைத்திருக்கிறாரோ?