தமிழ்நாடு

மீண்டும் மதுரை சென்றார் நிர்மலாதேவி

மீண்டும் மதுரை சென்றார் நிர்மலாதேவி

webteam

மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற புகாரில் நிர்மலாதேவி குரல் மாதிரி சோதனை முடிந்த நிலையில் அவர் மதுரை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். 

குரல் மாதிரி சோதனைக்காக நிர்மலா தேவி மதுரையில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். சென்னை மயிலாப்பூரில் உள்ள தடய அறிவியல் துறை அலுவலகத்தில் 3 மணி நேரம் நிர்மலா தேவிக்கு குரல் மாதிரி சோதனை நடந்தது. தடய அறிவியல் துறையில் உள்ள இயற்பியல் பிரிவின் துணை இயக்குநர் ஹேமலதா தலைமையிலான குழுவினர், நிர்மலா தேவிக்கு குரல் மாதிரி சோதனை நடத்தினர். மாணவிகளுடன் நிர்மலா தேவி பேசியதாக கூறப்படும் பதிவில் இருந்து, சில வார்த்தைகளை மட்டும் ஒரு பேப்பரில் எழுதி, அதை நிர்மலா தேவியை பேசச் சொல்லி தடய அறிவியல் துறையினர் பதிவு செய்தனர். 

ஏற்கெனவே உள்ள பதிவில் இருக்கும் அனைத்து வார்த்தைகளையும் பேசச் சொன்னால், வேறு மாதிரியாக நிர்மலா தேவி பேச வாய்ப்புள்ளது. அதன் காரணமாக சில வார்த்தைகளை மட்டும் பேசும்படி கூறினர். முந்தைய பதிவில் எப்படி பேசப்பட்டு இருந்ததோ, அதேபோல் நிர்மலா தேவி பேசும் வரை குரல் சோதனை நடைபெற்றது. இதன்பின்னர் சோதனையின் போது பதிவு செய்யப்பட்ட குரலும், ஏற்கனவே உள்ள தொலைபேசி உரையாடலும் ஒப்பிட்டு பார்க்கப்படும் என தெரிகிறது. இந்த நிலையில் குரல் மாதிரி சோதனைக்காக அழைத்து வரப்பட்டவர் மீண்டும் மதுரை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.