கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நிர்மலா தேவி 15 நாள் நீதிமன்ற காவல் முடிந்து நேற்று விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தபட்ட நிலையில் நிர்மலாதேவியை குரல் மாதிரி சோதனைக்கு சென்னை மயிலாப்பூரில் உள்ள தடய அறிவியல் துறை அலுவலகத்திற்கு அழைத்து செல்ல அனுமதி கோரி சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த நீதித்துறை நடுவர் திலகேஸ்வரி மனுவின் மீதான உத்தரவை இன்று பிறப்பிப்பதாக தெரிவித்து நிர்மலாதேவியை இன்று ஆஜர்படுத்த உத்தரவிட்டார். இந்நிலையில் நிர்மலாதேவி இன்று மீண்டும் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நிர்மலா தேவியை குரல் மாதிரி சோதனைக்கு சென்னை அழைத்துச் செல்ல அனுமதி மறுத்துடன் மதுரை மத்திய சிறையில் வைத்து குரல் மாதிரி சோதனை செய்யும் நிபுணர்கள் மூலம் குரல் மாதிரி சோதனை செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் நிர்மலாதேவியின் நீதிமன்ற காவலை வரும் 21ம் தேதி வரை 15 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. குரல் மாதிரி சோதனை செய்ய மதுரை மத்திய சிறையில் போதிய தொழில்நுட்ப வசதியில்லாததால் சென்னை மயிலாப்பூர் தடய அறிவியல் துறை ஆய்வகத்திற்கு அழைத்துச் செல்ல கோரி சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர் விரைவில் மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் தெரித்துள்ளனர்.