தமிழ்நாடு

‘பொருட்களை தூக்கி எறிந்து ரகளை’ - நிர்மலா தேவிக்கு என்ன ஆச்சு?

rajakannan

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி தன்னுடைய வீட்டில் உள்ள பொருட்களை தூக்கி எறிந்து ரகளையில் ஈடுபட்டார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி சமீபகாலமாக மனநிலை பாதிக்கப்பட்டது போல் நடந்து கொண்டிருந்தார். சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதீமன்ற வளாகத்தில் தனக்கு சாமி வந்திருப்பதாகவும் அருப்புக்கோட்டை தர்காவில் தனக்கு பேய் பிடித்து விட்டதாகவும் கூறி மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் நடந்து கொண்டார். 

இந்நிலையில், அருப்புக்கோட்டை அருகே ஆத்திப்பட்டி காவியன் நகரில் தான் குடியிருக்கும் வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் வெளியே தூக்கி எறிந்த நிர்மலா தேவி, அக்கம் பக்கத்து வீட்டினருக்கு சொந்தமான கார் கண்ணாடிகளை உடைத்தும்  ரகளை ஈடுபட்டார்.

மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் ரகளையில் ஈடுபட்டதால், அக்கம் பக்கத்தினர் அச்சமடைந்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். பின்னர் நிர்மலாதேவி வீட்டினுள் சென்று கதவை பூட்டி கொண்டார். 

அக்கம்பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில் விரைந்து வந்த அருப்புக்கோட்டை தாலுகா காவல்துறையினர் மற்றும் நிர்மலாதேவியின் அண்ணன்,  வீட்டினுள் இருந்த நிர்மலாதேவியை அழைத்தனர். ஆனால் அவர் கதவை திறக்கவில்லை. நீண்ட நேரம் அழைத்தும் வராததால் அண்ணன் திரும்பி சென்று விட்டார்.

பின்னர் அப்பகுதியினர் அச்சமடைந்திருப்பதால் நிர்மலாதேவி வீட்டின் முன்பு  போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நிர்மலா தேவி கதவை திறந்து வெளியே வந்தால் தான் விசாரக்க முடியும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.