தமிழ்நாடு

தமிழகத்தில் 9 மணல் குவாரிகள் திடீர் மூடல்

Rasus

தமிழகம் முழுவதும் ‌திடீரென 9 மணல் குவாரிகள்‌‌ மூடப்பட்டுள்ளன.

திருச்சி, கரூர், அரியலூர் ‌மாவட்டங்களில் இயங்கி வந்த மணல் குவாரிகளை தமிழக அரசு மூடியுள்ளது. இதன் காரணமாக, மணலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை கடுமையாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கட்டுமானத் தொழில் சரிவடையும் அபாயம் எழுந்துள்ளது. இதனால் 1 லட்சம் மணல் லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதோடு, கட்டுமானத் தொழிலை நம்பியுள்ள 10 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

அரசு இது குறித்து மறுபரிசீலனை செய்து‌ மணல்‌ குவாரிகளை திறக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் தமிழகம் முழுவதும் மணல் லாரி‌ உரிமையாளர்கள் போராட்டத்தில் குதிக்கப் போவதாகவும் அச்சங்கத்தி‌ன்‌ நிர்வாகிகள் எச்சரித்துள்ளனர்.