தமிழகத்தில் 5,027 கோடி ரூபாய் முதலீட்டில் 9 நிறுவனங்கள் தொடங்குவதற்கான ஒப்பந்தம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தானது.
சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், தொழில்வளர் தமிழ்நாடு முதலீடு மற்றும் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று, தொழில் நிறுவனங்களுக்கான குறை தீர்க்க உதவும் Biz buddy என்ற இணையதளத்தை தொடங்கிவைத்தார்.
பின்னர், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் புதிய பெயர் மற்றும் இலச்சினையையும் வெளியிட்டார். அப்போது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 5 ஆயிரத்து 27 கோடி ரூபாய் மதிப்பிட்டில் தொழில் தொடங்க 9 நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்தன. இதன் மூலம் 20 ஆயிரத்து 351 புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், தமிழகம் தொழில் மையமாக மாற அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்றார்.
இதையும் படிக்கலாமே: தமிழகத்தில் பாஜக வளரும் - ஜே.பி நட்டா நம்பிக்கை