தமிழ்நாடு

சாலையோரம் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள்: நோய்த் தொற்று அபாயத்தில் மக்கள்

kaleelrahman

கோத்தகிரி அரசு மருத்துவமனை மருத்துவக் கழிவுகளை சாலையோரத்தில் கொட்டுவதால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் இரவு நேரங்களில் மருத்துவமனை கழிவுகள், மற்றும் குப்பைகளை பெரிய பாலிதீன் கவரில் போட்டு மருத்துவமனையின் நுழைவு வாயில் பகுதியில் வைக்கப்படுகிறது. இவற்றை நாய், மாடு, பன்றி போன்ற விலங்குகள் அங்குள்ள பாலிதீன் கவர்களை கிழித்து சேதப்படுத்துவதால் அதிலுள்ள மருந்துக் கழிவுகள் சாலைகளில் சிதறிக் கிடக்கின்றன.

மருத்துவமனை அருகே காவல்நிலையம் மற்றும் குடியிருப்புகள் அதிக அளவு உள்ளது, இதனால் பொதுமக்கள் ,பஜார் பகுதிக்குச் செல்ல இந்த பிராதான சாலையை பயன்படுத்துகின்றனர். இதனால் சாலையோரம் கொடப்படும் மருத்துவ கழிவுகளால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே மருத்துவமனை நிர்வாகம் மருத்துவக் கழிவுகள் மற்றும் தேவையற்ற பொருட்களை பாதுகாப்பாக பேரூராட்சி சுகாதார பிரிவிடம் ஒப்படைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.