தமிழ்நாடு

நீலகிரி:வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பிளாஸ்டிக் கையுறை;சுற்றுச்சுழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு

kaleelrahman

நீலகிரி மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு வழங்கப்படும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கையுறைகள் சர்சையை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் குடிநீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் கேரிபேக்குகள், ஒருமுறை பயன்படுத்தும் டம்ளர்கள் ஆகியவற்றின் பயன்பாடு முற்றிலும் தடைசெய்யப்ட்டுள்ளது. இந்நிலையில் இதனை பயன்படுத்துபவர்களுக்கும், விற்பவர்களுக்கும் லட்சக்கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வாக்காளர்களுக்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கையுறைகள் வழங்கப்பட்டு வருவது சர்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக லட்சக்கணக்கான கையுறைகள் மாலைக்குள் பல பகுதிகளில் சிதறி கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால் மாவட்ட நிர்வாகம் மற்றும் தேர்தல் அதிகாரிகள் உடனடியாக இந்த பிளாஸ்டிக் கையுறைகள் பயன்பாட்டை நிறுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.