தமிழ்நாடு

நீலகிரி: குடியிருப்பு பகுதியில் உலா வரும் சிறுத்தை - அச்சத்தில் இருக்கும் மக்கள்

நீலகிரி: குடியிருப்பு பகுதியில் உலா வரும் சிறுத்தை - அச்சத்தில் இருக்கும் மக்கள்

kaleelrahman

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள புரூக்லேண்ட்ஸை சுற்றியுள்ள குடியிருப்புகளின் அருகே சிறுத்தை நடமாட்டம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதால் இப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள புரூக்லேண்ட்ஸ் அருகே அட்டடி, ஆள்வார்பேட்டை, உள்ளிட்ட பகுதிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் அண்மைக்காலமாக கரடி, காட்டெருமை, சிறுத்தை, உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது,

இந்நிலையில் இரவு நேரத்தில் இப்பகுதியில் உலாவந்த சிறுத்தை, இங்குள்ள ஒரு பங்களாவில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது, இது இப்பகுதி வசிக்கும் மக்களை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாளுக்கு நாள் இப்பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதால் வனத்துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வனத் துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.