தமிழ்நாடு

வசந்த காலத்தை வரவேற்க பூத்து குலுங்கும் நீலகிரி மலர்கள்...

வசந்த காலத்தை வரவேற்க பூத்து குலுங்கும் நீலகிரி மலர்கள்...

rajakannan

கடும் குளிர் காலத்தில் இருந்து, வசந்த காலத்திற்கு மாறும், கால மாற்றத்தை உணர்த்தும் நீலகிரி மலர்கள், கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பூத்து குலுங்குகின்றன. 

கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், கொடைக்கானல் கீழ்மலை மற்றும் நடுமலைப்பகுதிகளில், நீலகிரி மலர்கள் நீல வண்ணத்தில் நூற்றுக்கணக்கான மரங்களில், மரம் முழுவதும் பூத்து குலுங்கியுள்ளது, சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. 

நீல வண்ணத்தில் மலைப்பிரதேசங்களில் இந்த மலர்கள் பூத்து குலுங்கி, மலைச்சாரல்கள்  நீலவண்ணத்திற்கு மாறியிருந்ததை கண்ட முன்னோர்கள்,  நீலகிரி மலை என மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு  பெயரிட்டு அழைத்துள்ளதாக வரலாறு கூறுகிறது.