நீலகிரி மாவட்டம் கூடலூரில் யானைகளின் வழித்தடத்தில் அகழி வெட்டப்பட்டிருப்பதால் அவை காட்டிற்குள் செல்ல முடியாமல் தவித்து வருவதாகக் கூறப்படுகிறது.
யானைகளின் வழித்தடமாக இருக்கும் ஜூன்புல் தாவர மைய எல்லையில் வனத்துறை அகழி வெட்டியுள்ளது. இதனால், யானைகள் அந்த வழியாக செல்ல முடியாமல் நீண்ட நாட்கள் தடுமாறி வருகின்றன. நேற்றும் அங்கு வந்த யானைகள், சாலையில் நீண்ட நேரம் சுற்றித் திரிந்தன. அதன் பின்னர், மீண்டும் நாடுகாணி பகுதிக்கே சென்றன. நாடுகாணி பகுதியில் தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டிருந்த அந்த யானைகள், தொழிலாளர்களின் குடியிருப்பை சேதப்படுத்தி வந்தன. யானைகளை விரட்டக் கோரி, தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துவரும் நிலையில், அகழி வெட்டப்பட்டதன் காரணமாக, யானைகளால் வனப்பகுதிக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.