தமிழ்நாடு

கமல் மீது வழக்கு தொடர போலீஸ் ஆலோசனை

webteam

நிலவேம்பு விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசன் மீது எந்த சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யலாம் என சட்டநிபுணர்களுடன் போலீஸார் ஆலோசனை மேற்கொண்டனர்.

சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும் வரை தனது இயக்கத்தினர் நிலவேம்பு கசாயத்தை மக்களுக்கு விநியோகிக்க வேண்டாம் என கமல் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து அக்டோபர் 19-ம் தேதி சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில், நிலவேம்பு கசாயம் குறித்து அவதூறு பரப்பியதாக நடிகர் கமல்ஹாசன் மீது சமூக ஆர்வலர் தேவராஜன் புகார் தெரிவித்தார். இந்த புகார் குறித்த வழக்கில் விசாரணை நடத்தி, முகாந்திரம் இருந்தால் கமல் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் மீது எந்த சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யலாம் என சட்டநிபுணர்களுடன் போலீஸார் ஆலோசனை மேற்கொண்டனர்.