சேலத்தில் பழைய இரும்பு கிடங்கின் இரவுக் காவாலாளி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் சீலநாயக்கன்பட்டியை அடுத்த ஊத்துக்காடு பகுதியில் குணசேகர் என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு கிடங்கு உள்ளது. இங்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு ராமசாமி என்ற 70 வயது முதியவர் இரவு நேர காவலாளியாக பணியில் சேர்ந்துள்ளார். நேற்றிரவு வழக்கம்போல் பணிக்கு வந்த ராமசாமி இன்று காலை ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த நேரில் பார்த்த ஊழியர் ஒருவர், உரிமையாளருக்கு தகவல் கொடுத்துள்ளார். தொடர்ந்து, அன்னதானபட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கைரேகை உள்ளிட்ட தடயங்களை சேகரித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப பிரச்சினை காரணமாக ராமசாமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்ட ராமசாமிக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.