தமிழ்நாடு

தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடர்பு? - 4 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை 

தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடர்பு? - 4 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை 

webteam

தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடர்பு உள்ளதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தமிழகத்தின் 4 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை நடத்தி வருகின்றது. 

நாகையில் சிக்கல், மஞ்சக்கொல்லை பகுதியில் அசன் அலி, ஹாரிஸ் முகமது வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை மண்ணடியில் உள்ள இஸ்லாமிய ஹிந்த் என்ற கேரள அமைப்பின் அலுவலகத்தில் என்‌.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

இஸ்லாமிய ஹிந்த் அமைப்பின் தலைவர் செய்யது முகமது புகாரியின் சென்னை வீட்டிலும் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள வீட்டிலும் சோதனை நடக்கிறது. 7 பேர் கொண்ட அதிகாரிகள் குழு, காலை 7 மணியில் இருந்து சோதனை நடத்தி வருகிறது. தடை செய்யப்பட்ட இயக்கங்களோடு தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது. 

வெளிநாட்டு பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில் சோத‌னை நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.