தமிழ்நாடு

ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு? - கோவையில் மேலும் ஒருவர் கைது

ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு? - கோவையில் மேலும் ஒருவர் கைது

rajakannan

இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கோவை உக்கடம், போத்தனூர், குனியமுத்தூர் உள்ளிட்ட ஏழு இடங்களில் என்.ஐ.ஏ நேற்றைய தினம் ஏழு மணிநேரம் சோதனை மேற்கொண்டது. இலங்கை தாக்குதலுடன் தொடர்புடையவர்களுடன் செய்திகளை பரிமாறியதாக எழுந்த குற்றச்சாட்டில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் அசாருதீன் என்பவரை கைது செய்தனர். மேலும், ‌ஷேக் இதயத்துல்லா, இப்ராஹிம், அக்ரம் சிந்தா, சதாம் உசேன், அபுபக்கர் ஆகிய 5 பேரை, கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிட்டனர்.

அதனையடுத்து, முகமது உசேன், ஷாஜகான், ஷேக் ஷபிபுல்லா ஆகிய மூவர் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ், போத்தனூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களின் வீடுகளில் சிறப்பு நுண்புலனாய்வு பிரிவினர் நேற்று சோதனை நடத்தியதை அடுத்து வழக்குப் பதியப்பட்டது. அவர்கள் மூன்று பேரிடமும் இருந்து 4 செல்போன்கள், மடிக்கணினி மற்றும் புத்தகங்களை கைப்பற்றிய சிறப்பு நுண்புலனாய்வு பிரிவினர், தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையதாக ஷேக் இதயதுல்லா என்பரை தெற்கு உக்கடத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் இருந்து சிமி அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததற்கான ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.