தமிழ்நாடு

போலீஸ் காவலில் இளைஞர் மரணம் - மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

போலீஸ் காவலில் இளைஞர் மரணம் - மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

rajakannan

கடலூரில் விசாரணைக்காக அழைத்துச் சென்ற இளைஞர் மரணமடைந்த விவகாரம் தொடர்பாக தமிழக காவல்துறைக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயிலில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வினோத் என்ற இளைஞர் நேற்று மரணம் அடைந்தார். இளைஞர் தற்கொலைக்கு முயன்றதாக கூறி மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். ஆனால், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். 

இந்நிலையில், போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக காவல்துறைக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 6 வாரங்களுக்குள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய அந்த நோட்டீஸில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊடக செய்திகளின் அடிப்படையில் தானாக முன்வந்து மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.