தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அடுத்த வார இறுதியில் அறிவிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
முக்கியக் கட்சிகள் விருப்ப மனு விநியோகத் தேதியை அறிவித்து, தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. தேர்தல் ஆணையமும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த ஏற்பாடுகள் செய்து வருகிறது. சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை அடுத்த வார இறுதியில் வெளியிட தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஏப்ரல் இறுதி வாரத்தில், ஒரே கட்டமாக தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. வாக்குப்பதிவு முடிந்து மே 10-ஆம் தேதிக்கு பிறகு வாக்குகள் எண்ணப்படும் என்றும் தெரிகிறது.