தமிழகத்தில் ஜன.3 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும்வடக்கு கேரளாவை ஒட்டிய பகுதிகளின்மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவுவதாக, சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைபெய்யக்கூடும் என்று கூறியுள்ளது. மேலும், வரும் 3ஆம் தேதி வரை தமிழகம்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலைஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை நகரின் ஒருசில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு உறைபனிக்கான எச்சரிக்கை இன்றும் நீடிக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில், இரவு அல்லது அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலைஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் குறைந்தபட்ச வெப்பநிலையானது, இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறைவாக இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.