கனமழை
கனமழை ட்விட்டர்
தமிழ்நாடு

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய மழை! அடுத்த 4 நாட்களுக்கு எப்படி இருக்கும்?

PT WEB

அண்மைய ஆண்டுகளாக வடகிழக்குப் பருவமழை ஜனவரி வரை நீடிப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஜனவரி 9 ஆம் தேதியன்று தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மழை

10ஆம் தேதியும் தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 48 மணிநேரத்திற்கு சென்னையின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்த வடகிழக்குப்பருவமழைக்காலம் இன்னும் தீவிரமானதாகவே நீடிப்பதாக வானிலை ஆய்வுமைய தென்மண்டலத்தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து மேலும் விவரங்களை அறிய இந்த வீடியோவைப் பார்க்கவும்.