தமிழ்நாடு

ஸ்மார்ட் நகரங்களின் பட்டியலில் ஈரோடு

ஸ்மார்ட் நகரங்களின் பட்டியலில் ஈரோடு

webteam

ஸ்மார்ட் நகரங்களுக்கான நான்காவது பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ள நிலையில், அதில் தமிழகத்தில் இருந்து ஈரோடு நகரம் இடம்பெற்றுள்ளது. 

மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்றதும் முதல் பட்ஜெட்டில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி இந்தியாவில் 100 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டியாக உருவாக்கப்படும் என்றார். அதன்படி  பல்வேறு நகரங்கள் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது. தற்போது ஸ்மார்ட் நகரங்களுக்கான நான்காவது பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இப்போது வெளியிடப்பட்டுள்ள நகரங்கள் பட்டியலில் ஈரோடு, கவரட்டி, சஹாரன்பூர், மொராதாபாத், இடாநகர், பெய்ரலி, பிகார்ஷெரீப், தியூ, சில்வாசா ஆகிய 9 நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த 9 நகரங்களுக்கு 12 ஆயிரத்து 824 கோடி ரூபாய் நிதி ஒதுக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதில் 10 ஆயிரத்து 639 கோடி ரூபாய் நகர மேம்பாட்டுப் பணிகளுக்காக ஒதுக்கப்படும் என மத்திய நகர்ப்புற விவகாரத்துறை இணை அமைச்சர் ஹர்தீப் பூரி தெரிவித்துள்ளார். இந்த 9 நகரங்களையும் சேர்த்து இதுவரை ஸ்மார்ட் நகரங்களுக்கான நிதி ஒதுக்கீடு 2 லட்சத்து 4 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.