தமிழ்நாடு

திருமணமான 10 மாதங்களில் பெண் தற்கொலை?: பெற்றோர் புகார்

திருமணமான 10 மாதங்களில் பெண் தற்கொலை?: பெற்றோர் புகார்

webteam

சென்னையை அடுத்த குரோம்பேட்டையில், திருமணம் ஆன பத்து மாதங்களில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை கொண்டார். 

சென்னை, குரோம்பேட்டையில் உள்ள கணபதிபுரம் பகுதியில் சௌமியா- வினோத்குமார் தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் சௌமியா நேற்று வீட்டு வரவேற்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சௌமியா இறந்து ஒருநாள் கழித்தே தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக, அவரது பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். 

திருமணத்திற்கு போட்ட 20 சவரன் நகையை கேட்டு வினோத்குமாரும், அவரது குடும்பத்தினரும் சௌமியாவை கொடுமைப்படுத்தியதாக செளமியா குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும் ஒரு லட்சம் ரூபாய் பணம் மற்றும் இருசக்கர வாகனம் வாங்கித்தருமாறு சித்ரவதை செய்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சௌமியாவின் தாய் அளித்த புகாரின் பேரில், சிட்லபாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி பத்து மாதங்களே ஆன நிலையில் சௌமியா உயிரிழந்ததால் இந்த வழக்கு கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.