விருதுநகர் மாவட்டம் பிளவக்கல் பெரியார் அணையில் குளிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா பிளவக்கல் பெரியார் அணைக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். போதிய பொழுதுபோக்கு வசதிகள் இல்லாத போதிலும் இங்குள்ள தண்ணீரில் குளிக்க பெரும்பாலோனோர் ஆர்வம்காட்டுகின்றனர். அதன்படி, தனது நண்பர்கள் சுமார் 30 பேருடன் அணைக்கு வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமசேரியை சேர்ந்த ராஜபாண்டி என்பவர் அணையில் குளித்தபோது நீரில் மூழ்கி இறந்ததாக கூறப்படுகிறது.
நண்பர்கள் கொடுத்த தகவலின் பேரில் ராஜபாண்டியின் உடலை 5 மணி நேரத்துக்கு பின் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். தொடரும் இறப்புகளை தவிர்க்கவும் வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புபை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இறந்த ராஜபாண்டி கடந்த மூன்று மாதத்திருக்கு முன்பு தான் கனகலட்சுமி என்பவருடன் திருமணமானது என்பது குறிப்படதக்கது.