தமிழ்நாடு

அமைச்சகங்கள், துறைகளின் பெயர்களில் என்னென்ன மாற்றங்கள்? ஏன்? - ஸ்டாலின் ட்வீட்!

EllusamyKarthik

“அமைச்சகங்கள், துறைகளின் பெயர் மாற்றம்” - ஸ்டாலின் சொன்ன காரணம் இதுதான்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 9 மணி அளவில் தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். அவருடன் அமைச்சர்களாக தேர்வு செய்ய பட்டுள்ளவர்களும் பதவி பிரமாணம் செய்து கொள்ள உள்ளனர். இந்நிலையில் அமைச்சகங்கள், துறைகளின் பெயர்களில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் நாளை பதவியேற்க உள்ள புதிய அமைச்சர்களுக்கான துறைகள், தமிழில் அதன் உண்மையான பொருளைத் தரும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் புதிய துறைகளும் இணைக்கப்பட்டுள்ளன.

“தமிழகத்தில் உள்ள அமைச்சகங்கள்- துறைகளின் செயல்பாடுகள் மிகுந்த மாற்றங்களை அடைந்துள்ளன. மக்களின் எதிர்பார்ப்பு, சவால்கள், நிர்ணயிக்கப்படும் இலக்குகள், அரசின் இலட்சியங்கள் ஆகியவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு தொலைநோக்குப் பார்வையோடு பெயர்களை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது” என தெரிவிக்கபட்டுள்ளது.

என்னென்ன மாற்றங்கள்?

>தமிழகத்தின் நீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு ‘நீர்வளத்துறை’ என்ற தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது. 

>வேளாண்மைத்துறை ‘வேளாண்மை - உழவர் நலத்துறை’ என மாற்றப்பட்டுள்ளது. 

>சுற்றுச்சூழல் துறை ‘சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத் துறை’ என மாற்றப்பட்டுள்ளது. 

>மக்கள் நலவாழ்வுத்துறை ‘மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை’ என மாற்றப்பட்டுள்ளது. 

>மீன்வளத்துறை ‘மீன்வளம் - மீனவர் நலத் துறை’ என மாற்றப்பட்டுள்ளது. 

>தொழிலாளர் நலத்துறை ‘தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத் துறை’ என மாற்றப்பட்டுள்ளது. 

>செய்தி மக்கள் தொடர்புத்துறை ‘செய்தித் துறை’ என மாற்றப்பட்டுள்ளது. 

>சமூக நலத்துறை ‘சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை’ என மாறியுள்ளது. 

>பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை ‘மனிதவள மேலாண்மை துறை’ என மாறியுள்ளது. 

>வெளிநாடு வாழ் இந்தியர்கள் என்கிற துறை ‘வெளிநாடு வாழ் தமிழர் நலன் துறை’ என மாற்றப்பட்டுள்ளது.