புத்தாண்டு கொண்டாட்டங்கள் முகநூல்
தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் களைக்கட்டிய புத்தாண்டு கொண்டாட்டங்கள்!

தமிழகம் முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் பொதுமக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

PT WEB

தமிழகம் முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் பொதுமக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆட்டம் பாட்டத்துடன் 2025ஆம் ஆண்டை வரவேற்று மகிழ்ந்தனர்.

சென்னை மெரினா காமராஜர் சாலையில் இரவு 8 மணி முதல் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு பொதுமக்கள் திரண்ட வண்ணம் இருந்தனர். ஆடிப்பாடியும், உற்சாக குரல் எழுப்பியும் மகிழந்தனர். புத்தாண்டு பிறந்ததும் உற்சாகத்தில் திளைத்தனர்.

சென்னை பெசன்ட் நகர் கடற்கரை பகுதியிலும் ஏராளமானோர் திரண்டு, புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். போதைப் பொருளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நடைபெற்ற ட்ரோன் ஷோ பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. ஏரோ லைட் நிறுவனத்துடன் காவல்துறை இணைந்து நடத்திய இந்த ட்ரோன் ஷோவில், 200 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன.

புதுச்சேரியில் ஒயிட் டவுன் கடற்கரை சாலையில் குவிந்த மக்கள், உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆடிப்பாடி மகிழ்ந்ததுடன், புத்தாண்டை வரவேற்றனர். 12 மணிக்கு பிறகு, கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் அங்கிருந்து வெளியேற்றினர்.

கோவை ரேஸ் கோர்ஸ் சாலையில் திரண்ட பொதுமக்கள் உற்சாகத்துடன் புத்தாண்டை வரவேற்றனர். இதேபோல் மதுரை, நெல்லை, உதகை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது.

கோவை ரேஸ் கோர்ஸ்

சேலத்தில் புத்தாண்டு பிறப்பையொட்டி பல்வேறு கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரவு 7 மணி முதல் கொண்டாட்டங்கள் தொடங்கிய நிலையில் ஏராளமானோர் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

திருச்சி செம்பட்டு பகுதியில் உள்ள தனியார் விடுதியில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. சிறியவர்கள் முதல் பெரியோர் வரை அனைத்து தரப்பினரும் உற்சாகமாக நடனமாடி புத்தாண்டை வரவேற்றனர். மக்களை மகிழ்விக்க மேஜிக் ஷோ நடத்தப்பட்டதுடன், விதவிதமான உணவுகளும் பரிமாறப்பட்டன

புதுக்கோட்டையில் நடைபெற்ற ஃபேஷன் ஷோ பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.