தமிழ்நாடு

புதிய தலைமுறையின் புதிய குரல் THE FEDERAL

Rasus

குரலற்றவர்களின் குரலாய் கடந்த 8 ஆண்டுகளாக ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறது புதிய தலைமுறை. மாற்றத்தின் அங்கமாய், மக்களோடு மக்களாக நின்று அவர்களின் பிரச்னைகளை எடுத்துக் கூறுவதோடு, தீர்வு காண்பதிலும் புதிய தலைமுறைக்கு நிகர் புதிய தலைமுறைதான். தமிழக அரசியல் நிலவரம் ஆகட்டும், உலக நடப்பு ஆகட்டும் முந்திக் கொண்டு மக்களை சென்றடைவதால், புதிய தலைமுறைக்கு மக்களின் மனதில் என்றுமே முதலிடம்தான்.

செய்தி ஊடகம் என்பதை தாண்டிலும் இணையத்திலும் புதிய தலைமுறை தனி முத்திரையை பதிவு செய்து வருகிறது. செய்திகளின் தன்மை மாறாமல் உண்மையை உடனுக்குடன் வழங்குவதோடு ஃபேஸ்புக், ட்விட்டர்களிலும் வேகமாக செயல்பட்டு வருகிறது புதியதலைமுறை.

சமூக விழிப்புணர்வுக்காக புதிய தலைமுறை வார இதழ், மாணவ- மாணவியர்களின் கல்வி மெய்ப்பட ‘புதிய தலைமுறை கல்வி’, புதுயுக பெண்களுக்காக புதிய தலைமுறையின் பெண் என இதழ்களிலும் தன் பங்கை சிறப்புற செய்து வருகிறது புதிய தலைமுறை குழும ஊடகம்.

இப்பயணத்தின் அடுத்த படிக்கட்டாய் உருவாகியிருக்கிறது புதிய தலைமுறையின் ஆங்கில இணையதளமான The Federal. நாட்டு நடப்புகள், உலக நிகழ்வுகளை துல்லியமாக தருவதுடன் டிஜிட்டல் உலகில் புதிய சாதனை படைக்க உருவாகியிருக்கிறது The Federal. தென் இந்திய நிகழ்வுகள், அங்கு நடைபெறும் அரசியல் சார்ந்த நகர்வுகள், மக்களின் குறைகளை ஆங்கிலத்தில் உலகறிய செய்ய உள்ளது The Federal. செய்திகளை படிக்க www.thefederal.com என்ற முகவரிக்கு செல்லலாம்.