சென்னையில் கொல்லப்பட்ட பிஹாரை சேர்ந்த பெண், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான தடயங்கள் எதுவும் இல்லை என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிஹாரை சேர்ந்த இளைஞர் உட்பட ஒரேகுடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில்,கைது நடவடிக்கையுடன் விசாரணையை காவல் துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர். பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாக விசாரணையில்கொலையாளிகள் வாக்குமூலம் அளித்திருந்தனர்.
இந்நிலையில், பிரேத பரிசோதனையில், அந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்தற்கான தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை என தெரியவந்துள்ளது. தலையில் இரும்பு கம்பியால் தாக்கியதால் ஏற்பட்டகாயம் காரணமாகவே அந்த பெண்இறந்துள்ளது தெரியவந்திருப்பதாக காவல் துறையினர் கூறி உள்ளனர்.