தமிழ்நாடு

புதிய தலைமைச் செயலக கட்டுமான முறைகேடு: லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றம்

புதிய தலைமைச் செயலக கட்டுமான முறைகேடு: லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றம்

Rasus

ரகுபதி ஆணையம் விசாரித்துவந்த புதிய தலைமைச் செயலக கட்டுமான பணி முறைகேடு விவகாரத்தை, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

2006 -2011-ஆம் ஆண்டு முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலான ஆட்சியில் சென்னை சிம்சனில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. அதன்பின் 2016-ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில், கட்டுமானப் பணிகளில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் அமைக்கப்பட்‌ட விசாரணை ஆணையத்திற்கு, உயர்நீதிமன்றம் தடை விதித்தது.

இதையடுத்து முன்னாள் நீதிபதி ரகுபதி, விசாரணை ஆணையத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்தார். இந்த விவகாரத்தில் எடுக்கப்பட உள்ள அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதுதொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில், புதிய தலைமைச் செயலக கட்டுமான பணி முறைகேடு விவகாரத்தை, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.