சென்னை
சென்னை pt web
தமிழ்நாடு

சென்னை: பைக்கில் 40 கி.மீ வேகத்திற்கு மேல் செல்லக் கூடாது.. நவ.4 முதல் அமலுக்கு வரும் புதிய விதி!

Angeshwar G

சென்னையில் ஆட்டோக்கள் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை 35 கிமீ வேகத்தில் செல்லலாம். சென்னையில் இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை 35 கிமீ வேகத்தில் செல்லலாம் என சென்னை பெருநகர காவல் ஆணையம் அறிவித்துள்ளது.

சென்னை காவல் ஆணையராக சங்கர் ஜிவால் இருந்த போது இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று சென்னை போக்குவரத்து காவல்துறை வாகனங்களுக்கான வேகவரம்புகளை நிர்ணயம் செய்துள்ளது. அதன்படி பகல் 7 மணி முதல் 5 மணி வரை ஆட்டோ 25 கிமீ வேகத்திலும், கனரக வாகணங்கள் 35 கிமீ வேகத்திலும், இருசக்கர வாகனங்கள் 40 கிமீ வேகத்திலும் செல்லலாம் என வேக வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் ஆட்டோ 35 கிமீ வேகத்திலும், கனரக வாகனங்கள் 40 கிமீ வேகத்திலும், இரு சக்கர வாகனங்கள் 50 கிமீ வேகத்திலும் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னையில் மட்டும் 62.5 லட்சம் வாகங்கள் இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துகளைக் குறைக்கும் வகையிலும் பல்வேறு மாநிலங்களை ஒப்பிட்டுப் பார்த்தும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.