தமிழ்நாடு

தமிழ்நாடு பட்ஜெட் 2021 -22: தமிழ்நாடு சித்தா பல்கலைக்கழகம் அமைக்க முதற்கட்டமாக ரூ.2 கோடி

Sinekadhara

இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் மருத்துவத்துறை சார்ந்த திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதில், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டத்திற்கு ரூ. 959.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 108 ஆம்புலன்களின் எண்ணிக்கை 1,303 ஆக அதிகரிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு ரூ.1,046,09 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பழனி தண்டாயுதபாணி கோயில் மூலம் புதிய சித்தா மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என தமிழக அரசின் பட்ஜெட் தாக்கலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சித்தா பல்கலைக்கழகம் அமைக்க முதற்கட்டமாக ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு மொத்தம் ரூ.18,933.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.