தமிழ்நாடு

திருமண விழா இ-பதிவுக்கு புதிய விதிமுறை!

Sinekadhara

திருமண விழாவில் பங்கேற்பவர்கள் அத்தனை பேரின் வாகன எண்களும் ஒரே இ-பதிவில் குறிப்பிட வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் திருமணங்களுக்கு செல்ல இ-பதிவு முறை கட்டாயம் என அறிவித்திருந்தது. ஆனால் பல இடங்களில் விதிமுறைகள் மீறப்பட்டதால் இ-பதிவு பக்கத்திலுள்ள விருப்பத்தேர்வில் நேற்றைய தினம் திருமணம் என்ற பிரிவு நீக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் சில விதிமுறைகளுடன் திருமணம் சேர்க்கப்பட்டுள்ளது.

அதன்படி, திருமண விழாவில் பங்கேற்பவர்கள் அத்தனை பேரின் வாகன எண்களும் ஒரே இ-பதிவில் குறிப்பிட வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அனைத்து வாகனங்களின் எண்கள், ஓட்டுநர் பெயர், கைபேசி எண், பயணிப்போரின் பெயர், ஒரு அடையாள ஆவணம் அவசியம் எனவும் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. மணமகன், மணமகள், தாய், தந்தை என இவர்களில் ஒருவர் மட்டுமே இ-பதிவை மேற்கொள்ளவேண்டுமெனவும், விண்ணப்பதாரரின் பெயர் இ-பதிவில் கட்டாயம் இடம்பெற வேண்டுமெனவும் கூறியிருக்கிறது. மேலும் திருமண அழைப்பிதழை கட்டாயம் பதிவேற்றம் செய்யவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.