தமிழ்நாடு

தமிழ்நாட்டில் புதிய தளர்வுகள் நாளை முதல் அமல்

தமிழ்நாட்டில் புதிய தளர்வுகள் நாளை முதல் அமல்

jagadeesh

கொரோனா ஊரடங்கில் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கூடுதல் தளர்வுகள் நாளை முதல் அமலுக்கு வருகின்றன.

ஏற்கெனவே அமலில் உள்ள ஊரடங்கு நாளை காலை 6 மணிக்கு முடிவடையும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியாக அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகள் அமலுக்கு வரவுள்ளன. அதன்படி, உணவகங்கள், தேநீர் விடுதிகளில் 50 சதவிகித வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்த அனுமதிக்கப்படவுள்ளது. மேலும், இப்போது இரவு 7 மணி வரை அனுமதிக்கப்படும் அனைத்து கடைகளும் இரவு 8 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்படவுள்ளது.