தமிழ்நாடு

பெண் காவலர்களுக்காக புதிய திட்டம் - ரூ.5 செலுத்தினால் நாப்கின் வழங்கும் கருவி!

Sinekadhara

பெண்கள் வேலைக்குச் செல்வது சகஜமாகிவிட்ட சூழலில், மாதவிடாய் காலங்களில் அலுவலங்களிலோ, பணியிடங்களிலோ, நாப்கின் இல்லாமல் அவதிப்படுவதும் சர்வசாதாரணமாக இருக்கிறது. அதிலும் பாதுகாப்பு பணியில் இருக்கும் பெண் காவலர்களின் நிலையை சொல்லவே வேண்டாம்.

இப்படிப்பட்ட சூழலில், நாட்டிலேயே முதல்முறையாக கடலூர் மாவட்டத்தில் 5 ரூபாய் செலுத்தினால், நாப்கின் வரும் திட்டம், பெண் காவலர்களுக்காக தொடங்கப்பட்டுள்ளது.

மாதவிடாய் பிரச்னைகளை வெளிப்படையாக குடும்பத்தினரிடையே பேசக்கூட இன்றளவும் பெண்கள் மத்தியில் தயக்கம் உள்ளநிலையில், பெண் காவலர்களின் சங்கடங்களை உணர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது வரவேற்பை பெற்றுள்ளது