தமிழ்நாடு

புதிய பாடத்திட்டத்தின் வரைவு வெளியீடு

புதிய பாடத்திட்டத்தின் வரைவு வெளியீடு

webteam


தமிழகத்தில் பள்ளி கல்விக்கான புதிய பாடத்திட்டத்தின் வரைவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

தமிழகத்தில் 11, 12 வகுப்புகளுக்கான பாடத்திட்டம் 14 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றியமைக்கப்படுகிறது. 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டம் 7 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றப்படுகிறது. புதிய பாடத்திட்டத்திற்கான வரைவு அறிக்கையை தயாரிக்க 200 பேர் கொண்ட உயர்மட்ட ஆசிரியர்கள் குழு அமைக்கப்பட்டது. அக்குழு புதிய பாடத்திட்டத்தின் வரைவு அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்தது. இந்த வரைவு அறிக்கை பள்ளிக்கல்வித்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பாடத்தினைப் போன்று தரமாகவும், நீட் போன்ற போட்டித் தேர்வுக்கு தயாராகும் வகையிலும் புதிய பாடத்திட்டம் அமைக்கப்பட்டிருப்பதாக பாடத்திட்டக் குழுவினர் தெரிவிக்கின்றனர். புதிய பாடத்திட்டத்தில் செயல்வழிக் கற்றலுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு பாடத்தின் இறுதியிலும் ஆசிரியர்களும், மாணவர்களும் அந்த பாடம் தொடர்பாக கலந்துரையாடி கருத்துக்களை தெரிவிக்கும் வசதியும் இருப்பதாக கூறப்படுகிறது. புதிய பாடத்திட்டத்திற்கான வரைவு பள்ளிக்கல்வித்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டு கருத்துக்கள் கேட்கப்படவுள்ளன. அதனைத் தொடர்ந்து ஜனவரியில் இறுதி செய்யப்பட்டு, வரும் கல்வியாண்டு முதல் புதிய பாடத்திட்டம் அமலுக்கு வரவுள்ளது.