தமிழ்நாடு

ஒரே எந்திர மென்பொருள் மூலம் 4 சிகிச்சைகள்.. கும்பகோண மருத்துவர் புதிய முயற்சி..!

ஒரே எந்திர மென்பொருள் மூலம் 4 சிகிச்சைகள்.. கும்பகோண மருத்துவர் புதிய முயற்சி..!

webteam

நாட்டிலேயே முதன்முறையாக 4 சிகிச்சைகளை மேற்கொள்ளும் அதிநவீன ஒரே ரோபோ எந்திரத்தின் மென்பொருளை உருவாக்கி கும்பகோணத்தைச் சேர்ந்த மருத்துவ விஞ்ஞானி ஒருவர் சாதனை படைத்துள்ளார். 

கண், காது, மூக்கு மற்றும் தோள் பகுதியில் அறுவை சிகிச்சை செய்வதற்கு அமெரிக்கா, லண்டனில் உள்ளதுபோல் உள்நாட்டிலேயே அதிநவீன மென்பொருள் தொழில்நுட்பம் தேவை என நீண்ட நாட்களாக பலர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் கும்பகோணம் அருகே பிள்ளையாம்பேட்டையில் தனியார் லேப்மூலம் இரண்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதன் பயனாக லேசர் அறுவை சிகிச்சைக்கான அதிநவீன மென்பொருள் தொழில்நுட்பம் ஒன்றை இந்நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. அதன் நிறுவனர் ஹரி இதனை உருவாக்கியுள்ளார்.  

இந்த நவீன தொழில் நுட்பத்தை உருவாக்கிய விஞ்ஞானி ஹரி பிரகாஷ் இதுகுறித்து கூறும்போது “இந்த லேசர் இயந்திர மென்பொருளில் சர்ஜிகல், பிராக்சனல், அப்ளேஷன், பைபர் என நான்கும் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த லேசர் இயந்திரத்தின் மூலம் அறுவை சிகிச்சை, தோல் சிகிச்சை, கண், காது, மூக்கு சிகிச்சை, நரம்பு சிகிச்சை லேசர் முறையில் குறைந்த நேரத்தில் மேற்கொள்ள முடியும்” என்று தெரிவித்தார்.