வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை வரை பெய்யக் கூடும் என்றும் தேனி மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
17ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகள் வடதமிழக கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்ககூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த இருநாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரில் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.