தமிழ்நாடு

ரவுடிகளைக் கட்டுப்படுத்த புதிய சட்டம் - உயர் நீதிமன்றத்தில் காவல்துறை பதில்.!

ரவுடிகளைக் கட்டுப்படுத்த புதிய சட்டம் - உயர் நீதிமன்றத்தில் காவல்துறை பதில்.!

webteam

ரவுடிகளை கட்டுப்படுத்த புதிய சட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ரவுடிகள் கலாச்சாரம் தலைதூக்கி உள்ள நிலையில், அவர்களை கட்டுப்படுத்த புதிய சட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான வரைமுறைகள் வகுக்கப்பட்டு,  அரசின் அனுமதிக்காக அவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.