ரிஷிவந்தியத்தில் புதிதாக அரசு கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
கொரோனா ஆய்வுப்பணி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்க கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குச் சென்றுள்ள தமிழக முதலமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு நேரடியாக சென்று பரிசோதனை செய்யப்படுகிறது. அதேபோல கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்பட்ட ஆறுமாதத்தில மருத்துக் கல்லூரி கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வெகுவிரையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவி வழங்கப்பட உள்ளது. தடுப்பு அணைகள் கட்டும் பணியும் முழுவீச்சில் நடைபெற்ற வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக கலை அறிவியல் தொடங்கப்பட்டுள்ளது. ரிஷிவந்தியத்தில் புதிதாக அரசு கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.