தமிழ்நாடு

மெட்ரோ ரயில்களில் பயணிக்க விரைவில் புதிய வசதி அறிமுகம் - என்ன அது?

webteam

மெட்ரோ ரயில்களில் பயணிக்க, வாட்ஸ்-அப் மூலமாக டிக்கெட் எடுக்கும் வசதியை விரைவில் மெட்ரோ ரயில் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது.

சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மெட்ரோ ரயில்களில் பயணிக்க நேரடி பயணச் சீட்டை பெற்றுக் கொள்ளும் முறை , பயண அட்டை முறை, க்யூ ஆர் கோடு மூலம் பணம் செலுத்தி பயணிக்கும் முறை என மூன்று முறைகள் உள்ளன.

இந்நிலையில், மெட்ரோ ரயில் பயணிகள் வாட்ஸ்-அப் மூலமாக டிக்கெட் எடுத்து பயணிக்கும் வசதியை மெட்ரோ ரயில் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பொதுவான கைப்பேசி எண் பயணிகளுக்கு வழங்கப்படும்... இந்த எண்ணுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஹஹாய் என்று குறுந்தகவல் அனுப்பினால் சார்ட் போட்' என்ற தகவல் வரும். அதில் டிக்கெட் எடுப்பது தொடர்பான தகவல்கள் இடம் பெற்றிருக்கும்.

அதில், பயணியின் பெயர், புறப்படும் மெட்ரோ ரயில் நிலையம், சேரும் ரயில் நிலையம் ஆகியவற்றை பதிவுசெய்து, வாட்ஸ்-அப் மூலமோ, ஜிபே, யு-பே மூலமோ பணம் செலுத்தினால், டிக்கெட் வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்துவிடும். இந்த டிக்கெட்டை ரயில் நிலைய நுழைவாயிலில் உள்ள QR குறியீடு ஸ்கேனரில் காண்பித்து மெட்ரோ ரயிலில் பயணிக்க முடியும். வெளியே செல்லும் இடத்தில் உள்ள க்யூஆர் குறியீடு ஸ்கேனரில் காண்பித்து வெளியே செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வர உள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.