தமிழ்நாடு

`அரசுப் பள்ளிகளில் ரூ 1,050 கோடி செலவில் புதிய வகுப்பறைகள்’- பேரவையில் முதல்வர் அறிவிப்பு

webteam

பள்ளி மானவர்களிடம் கல்வித் தரத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் இந்தாண்டு 1,050 கோடி ரூபாய் செலவில் 7,200 வகுப்பறைகள் கட்டப்படுமென தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் மூன்றாவது நாள் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேரம் இல்லா நேரத்தில் போது 110 விதியின் கீழ் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறைக்கு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் தமிழக அரசு, கல்விக்காக காலை உணவு திட்டம், இல்லம் தேடி கல்வித் திட்டம், எண்ணும் எழுத்தும் என்ற திட்டம், நான் முதல்வன் திட்டம், தகைசால் பள்ளிகள், என பல்வேறு திட்டங்களை கொண்டு வந்திருக்கிறோம்.

இதில் பள்ளிக் கல்வித் துறைக்கு 26 ஆயிரம் புதிய வகுப்பறைகள், 7,500 சுற்றுச்சுவர் தேவை இருப்பதாகவும், மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் 15 லட்சம் மாணவர்கள். அரசு பள்ளிகளில் கூடுதலாக சேர்ந்து படித்து வருவதால், ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிகளுக்கு 200 கோடி ரூபாய் செலவில், 6000 புதிய வகுப்பறைகளும், 250 கோடி ரூபாய் செலவில் நடுநிலை பள்ளிகளுக்கு 1,200 வகுப்பறைகளும்.

ஒட்டு மொத்தமாக 1,050 கோடி ரூபாய் செலவில் 7,200 வகுப்பறைகள், இந்த ஆண்டு கட்டப்படும். இதனால் மாணவர்களுக்கு தரமான கல்வியும் பாதுகாப்பான சூழலையும் உருவாக்க முடியும் என்று தமிழக முதலமைச்சர் கூறினார்.