தமிழ்நாடு

தீபாவளிக்குள் அதே இடத்தில் சென்னை சில்க்ஸ்! உரிமையாளர் பேட்டி

தீபாவளிக்குள் அதே இடத்தில் சென்னை சில்க்ஸ்! உரிமையாளர் பேட்டி

Rasus

தீ விபத்துக்குள்ளான கட்டடம் இடிக்கப்பட்ட உடன், அரசு அனுமதியோடு தீபாவளிக்குள் அந்த இடத்தில் புதிய கட்டடம் கட்டப்படும் என்று சென்னை சில்க்ஸ் உரிமையாளர் மாணிக்கம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய அவர், கடையில் இருந்த பொருட்களுக்கு 200 கோடி ரூபாய் மதிப்புக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். தரைத்தளம் மற்றும் இரண்டாம் தளத்தில் வைக்கப்பட்டிருந்த தங்க, வெள்ளி வைர நகைகள் என்னவானது என்பது பற்றி இதுவரை தெரியவில்லை என்று கூறிய அவர், விபத்து நேரிட்ட பிறகு அரசு அதிகாரிகள் சிறப்பான ஒத்துழைப்பு அளித்து வருவதாகக் கூறினார். விபத்துக்குள்ளான கிளையில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு மற்ற கிளைகளில் வேலை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.