நீலகிரி - 2 மாணவிகள் பயிலும் பள்ளிக்கு ரூ.25 லட்சத்தில் புதிய கட்டடம்
நீலகிரி - 2 மாணவிகள் பயிலும் பள்ளிக்கு ரூ.25 லட்சத்தில் புதிய கட்டடம் புதிய தலைமுறை
தமிழ்நாடு

நீலகிரி | 2 மாணவிகள் பயிலும் பள்ளிக்கு ரூ.25 லட்சத்தில் புதிய கட்டடம்

PT WEB

கடந்த 1982 ஆம் ஆண்டு காவயல் பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக அரசு தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் இப்பள்ளியில் 100க்கும் அதிகமான மாணவர்கள் பயின்று வந்த நிலையில், தற்போது 3ஆம் வகுப்பு, 4ஆம் வகுப்பு ஆகியவற்றில் தலா ஒரு மாணவி மட்டுமே பயின்று வருவதாக கூறப்படுகிறது. இந்த பள்ளிக்கட்டடம் தேர்தல் நேரங்களில் வாக்கு சாவடியாக பயன்படுத்தப்பட்டு வருவதால் அரசும் இதனை மூடாமல் பராமரித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அடிப்படை வசதிகள் இல்லாத ஏராளமான பள்ளிகள் உள்ள நிலையில், ஏன் மாணவர்களே இல்லாத இந்த பள்ளிக்கு 25 லட்சம் ரூபாய் செலவிட வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது.