தேனி மாவட்டத்தில் பிறந்து 4 நாட்களே ஆன ஆண் குழந்தையை வைகை ஆற்றின் உறைகிணற்றில் வீசியவர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே குன்னூர் வைகை ஆற்றிலுள்ள கூட்டுக்குடிநீர் திட்ட குடிநீர் எடுக்கும் உறை கிணற்றில் ஒரு குழந்தையின் சடலம் கிடப்பதாக கானாவிலக்கு காவல்துறையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து கானாவிலக்கு காவல்துறையினர் ஆண்டிபட்டி தீயணைத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
அங்கு சென்ற அவர்கள் ஒருமணி நேரம் போராடி குழந்தையின் உடல் சிதையாமல் மீட்டனர். விசாரணையில் பிறந்து நான்கு நாட்களே ஆண் குழந்தை என்பது குழந்தையின் தொப்புள் கொடி அகற்றிய கிளிப்பின் குறிப்புகள் மூலம் தெரிய வந்தது. இதனை ஆதாரமாக வைத்து குழந்தையை கிணற்றில் வீசியது யார் என்பது குறித்து கானாவிலக்கு காவல்துறையினர் தங்களது தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்.
பச்சிளம் குழந்தையென்றும் பாராமல் ஈவு இரக்கமில்லாமல் கிணற்றில் வீசி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆண்டிபட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .