தமிழ்நாடு

சென்னை, திருச்சியிலிருந்து புதிய ரயில்கள்

சென்னை, திருச்சியிலிருந்து புதிய ரயில்கள்

webteam

சென்னை மற்றும் திருச்சியிலிருந்து புதிய ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வேத் துறை தெரிவித்துள்ளது.

இதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து மேற்கு வங்க மாநிலம் சந்திரகாச்சிக்கு அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளது. மேற்கு வங்காள மாநிலம் ஹவுராவிலிருந்து சென்னை வழியாக கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு அந்தியோதயா விரைவு ரயில் இயக்கப்பட உள்ளது. பயண நெரிசல் மிகுந்த பாதைகளில் அந்தியோதயா விரைவு ரயில் என்ற பெயரில் முற்றிலும் முன்பதிவற்ற பெட்டிகளை கொண்ட ரயில்கள் இனி இயக்கப்பட உள்ளன. இதேபோல முற்றிலும் 3 அடுக்குகள், குளிர்சாதன வசதி கொண்ட ரயில்கள் ஹம்சஃபர் என்ற பெயரில் விடப்பட உள்ளன. அசாம் மாநிலம் காமாக்யாவிலிருந்து சென்னை வழியாக பெங்களூருக்கு வாராந்திர ஹம்சஃபர் ரயில் இயக்கப்பட உள்ளது. இதே போல திருச்சியிலிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகருக்கு ஹம்சஃபர் ரயில் விடப்பட உள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாதிலிருந்து சென்னைக்கும் ஹம்சஃபர் ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.