புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடக்கு ஒடிசா முதல் வடக்கு கேரளம் வரை வங்கக்கடலில் பரவியிருந்த மேலடுக்கு சுழற்சியானது காற்றழுத்தத் தாழ்வு நிலையாக மாறியுள்ளது. இதன் காரணமாக வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யகூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.