தமிழ்நாடு

பேச மறுத்த காதலி... - சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நேபாளி இளைஞர்

webteam

காதலி பேச மறுத்ததால் நேபாளி இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பீர்க்கன்கரணை அடுத்த ஆலப்பாக்கத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் காவலாளியாக பணிபுரிந்து வருபவர் நேபாள நாட்டை சேர்ந்த டில் பகதூர்(22). இவர் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பணியில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவர் தன் சொந்த ஊரில் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவருடன் அடிக்கடி மணிக்கணக்கில் பேசி காதலை வளர்த்துள்ளார். திடீரென காதலி பகதூருடன் பேச மறுத்ததாக தெரிகிறது.

காதல் தோல்வியின் விரக்தியில் மன உளைச்சலுக்கு ஆளான டில் பகதூர் தனியார் கல்லூரியின் வளாகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட சக ஊழியர்கள் பீர்க்கன்கரணை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.