பஸ் மோதிய விபத்து pt desk
தமிழ்நாடு

நெல்லை | இஸ்ரோ பணியாட்களை ஏற்றிச் சென்ற பஸ் மோதிய விபத்து – டீக்கடையில் நின்றிருந்த இருவர் பலி

நெல்லையில் இஸ்ரோ பணியாட்களை ஏற்றிச் சென்ற பஸ் மோதிய விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

PT WEB

செய்தியாளர்: ராஜூ கிருஷ்னா

நெல்லையில் இருந்து காவல்கிணற்றில் உள்ள இஸ்ரோவிற்கு பணியாட்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று இஸ்ரோ நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அப்போது நெல்லை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை பாம்பன்குளம் பஸ் நிலையம் அருகே வரும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரமாக உள்ள டீக்கடையின் முன்பு புகுந்தது.

அப்போது டீக்கடையின் முன்பு நின்று கொண்டிருந்த கிருஷ்ணன் (58) மற்றும் குணசேகரன் (65) ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்த்னர். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே குணசேகரன் உயிரிழந்தார்.

கிருஷ்ணன், நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பணகுடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.