தமிழ்நாடு

37 வருடத்திற்கு முன் கடத்தப்பட்ட ‘நடராஜர் சிலை’ ஆஸ்திரேலியாவில் மீட்பு

webteam

நெல்லையில் கடத்தப்பட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலிய மியூசியத்தில் மீட்கப்பட்டிருப்பதாக சிலைகடத்தல் தடுப்புப்பிரிவி சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில், 37 வருடங்களுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் உடனுறை அறம் வளர்த்த நாயகி அம்மன் கோயிலின் கருவறையின் இரும்புக்கதவை உடைத்து களவாடப்பட்ட நடரஜார் சிலையை ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒத்துழைப்பு அறவே இல்லாத நிலையில் நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு சிலை மீட்கப்பட்டிருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த சிலையை கண்டுபிடிக்க முடியவில்லை என நெல்லை காவல்துறை 1984ஆம் ஆண்டு வழக்கை மூடியதாகவும், 35 வருடத்திற்கு பிறகு இதை பொன்.மாணிக்கவேல் கண்டுபிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சிலை டெல்லி கொண்டுவரப்பட்டு, பின்னர் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் நாளை மறுநாள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடையும் எனவும் கூறப்பட்டுள்ளது.