இளைஞர் ஒருவரை ஓட ஓட விரட்டிக் கொன்ற 6 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லை பாளையங்கோட்டை அருகே மனக்காவலம்பிள்ளை நகரைச் சேர்ந்தவர் ராஜா என்ற ராஜலிங்கம். சென்ட்ரிங் கான்ட்ராக்டர். நேற்று இரவு இவரது வீட்டுக்கு 6 பேர் கொண்ட மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வந்தது. இவர்களைக் கண்டதும் ராஜலிங்கம் தப்பி ஓடினார். ஆனால் தொடர்ந்து விரட்டிய கும்பல், அவரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியது. இதில் படுகாயமடைந்த ராஜலிங்கம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் பாளையங்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாணை நடத்தினர். பின்னர் உடலைக் கைப்பற்றி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழங்கு பதிவு செய்து, கொலைக்கான காரணம் என்ன, முன்விரோதம்உள்ளதா, அல்லது சாதிய மோதால் கொலை நடந்ததா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய கும்பலைப் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.