தமிழ்நாடு

8 வயது நெல்லை சிறுமி 8 வகையான யோகா சாதனை

8 வயது நெல்லை சிறுமி 8 வகையான யோகா சாதனை

webteam

நெல்லையைச் சேர்ந்த 8 வயது சிறுமி, உலக யோகா தினமான இன்று பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில், 8 வகையான சாதனைகளை நிகழ்த்தினார். 

நெல்லை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 8 வயது சிறுமி ப்ரிஷா. இவர் சிறு வயது முதலே யோகா பயிற்சியை ஆர்வமுடன் பயின்று வந்திருக்கிறார். நான்காம் வகுப்புப் படிக்கும் ப்ரிஷா, இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட தங்கப் பதக்கங்களும், யோகா ராணி, யோகா கலா, யோகாஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு பட்டங்களையும் வென்றிருக்கிறார். ஒரு நிமிடத்தில் கண்டபேரூண்டாசனத்தை 16 முறை செய்து முதல் உலக சாதனை செய்திருக்கிறார். 

அதேபோல லோகஸ்கார்பியன் போஸ் என்ற ஆசனத்தை 3.2 நிமிடத்தில் செய்து 2வது உலக சாதனையையும், ராஜ கபோட்டாசனத்தை 5.13 நிமிடத்தில் செய்து 3ஆவது உலக சாதனையையும் வென்றிருக்கிறார். இந்நிலையில், உலக யோகா தினமான இன்று பாளையங்கோட்‌டை அண்ணா விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில், 8 வகையான யோகா செய்து சாதனைகளை நிகழ்த்தினார்.