தமிழ்நாடு

திருவிழாவில் பட்டாசு வெடித்து ஒருவர் பலி

திருவிழாவில் பட்டாசு வெடித்து ஒருவர் பலி

webteam

நெல்லையில் கோவில் திருவிழாவின் போது பட்டாசு வெடித்து சிதறியதில் ஒருவர் உயிரிழந்தார்.

நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே உள்ள மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது. அப்போது திருவிழா கொண்டாடத்திற்காக சத்தம் மிகுந்த பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. அவ்வாறு வெடிப்பதற்காக வைக்கப்பட்ட சில பட்டாசுகள் திடீரென தீப்பிடித்து வெடித்து சிதறின. இதில் கணபதி என்பவர் ‌சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த 3 பேர் பலத்த காயங்களுடன் தென்காசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோவில் திருவிழாவின் போது ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.